இடிக்கப்படும் பள்ளி கட்டிடங்களுக்கு மாற்று ஏற்பாடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை என அமைச்சர் தகவல்.

நெல்லையில் இயங்கி வரும் சாஃப்டா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழுந்ததில் அந்தப் பள்ளி மாணவா்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆரிசியர் உள்ளிட்ட ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள உறுதி தன்மையற்ற பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருகாமையில் பள்ளி இல்லையென்றால் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்