காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் இன்று.!

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. … Read more

வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? விவாதிக்க நான் தயார் – பிரகாஷ் ஜவடேகர்

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக  வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். சென்னையில் நடைபெற்ற  விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள்  நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின்  எல்லையில் விவசாயிகள் … Read more

அரசாங்கத்தின் மிருகத்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது – ராகுல் காந்தி

சீக்கிய மதகுரு பாபா ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில்,மோடி அரசாங்கத்தின் மிருகத்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 22-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு  தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே  65 வயதான சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது … Read more

இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ! புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு ?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா … Read more

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் – சிவானந்த் திவாரி

பீகாரில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் பிரியங்கா காந்திக்கு சொந்தமான இடத்திற்கு  ராகுல் காந்தி சுற்றுலா சென்றிருந்தார் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை … Read more

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்! நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள். தலைவர்கள் மரியாதை. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனையடுத்து, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த  நாளில்,அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், பல தலைவர்கள் ட்வீட்டர் … Read more

நாளை காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.!

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி முன்னிலையில் நாளை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை என்பவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக … Read more

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு ராகுல் காந்தி வாழ்த்து .!

அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு ராகுல் காந்தி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் … Read more

தமிழகத்தில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல்காந்தி பங்கேற்பு

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில்  ராகுல் காந்தி பங்கேற்கிறார். நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக ஏர்கலப்பை பேரணிகள் விரைவில் நடத்தப்படும்  என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார்.தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில … Read more

உ.பி அரசைப்போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால் நீதி கிடைக்கப் போராடுவேன் -ராகுல் பதிலடி

உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில்  19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் … Read more