இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ! புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு ?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது.இதனிடையே அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை காணொலி காட்சி மூலமாக  இந்த கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் கோவா சென்றுள்ள நிலையில் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.