ஹத்ராஸ் வழக்கு… சிபிஐ 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

உ.பி.யில் ஹத்ராஸ் வழக்கில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழு குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஹத்ராஸில் ஒரு தலித் இளம் பெண் புல் வெட்டுவதற்காக சென்றார். அப்போது, சந்தீப், லாவ்குஷ், ரவி மற்றும் ராமு ஆகிய 4  உயர்சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் … Read more

ஹத்ராஸ் வழக்கு ! அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்- உச்சநீதிமன்றம்

ஹத்ராஸ் வழக்கு தொடர்பான விசாரணையை  அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு  தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. … Read more

உ.பி அரசைப்போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால் நீதி கிடைக்கப் போராடுவேன் -ராகுல் பதிலடி

உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில்  19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் … Read more

ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் இரு சிறுவர்கள் கைது!

ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி என்றால் உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்  எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 உயர் ஜாதி ஆண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தான். இது, நாட்டையே உலுக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் நிலை அடங்குவதற்குள் உத்திரப்பிரதேசத்தில் அடுத்த பாலியல் வன்கொடுமை … Read more

ஹத்ராஸ் வழக்கு..சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு.!

ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 -வயது இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

ஹத்ராஸ் வழக்கு.. பேரணி நடத்திய கனிமொழி கைது..!

ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிர் அணியினர் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுக தொண்டர்களை காவல்துறையினரால் கைது செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் … Read more

‘உ.பி. அரசின் மவுனம்’ வருத்ததையும், கவலையும் அளிக்கிறது – மாயாவதி

ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையில், பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் … Read more

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை ! உ.பி. அரசு இதற்கான பதில்களைக் அளிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரியங்கா காந்தி அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.  உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று  மீண்டும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு … Read more

ஹத்ராஸ் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு யோகி பரிந்துரை..!

ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.

உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றடைந்த ராகுல்காந்தி ..!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த  செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன்  ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர். ஆனால்,  டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி … Read more