அந்த படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்தால் அழுகையை அடக்க முடியவில்லை – கங்கனா ரனாவத் பதிவு!

TejasMovie - YogiAdityanath

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சிவசப்பட்டதாக கங்கனா இணையத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேஜஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை உத்தரப்பிரதேச உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இந்நிலையில், ‘தேஜஸ்’ திரைப்படத்தை பார்த்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும் போது அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகை … Read more

டால்பின் – உத்திர பிரதேச மாநில நீர்வாழ் விலங்கு.! முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

UP CM Yogi Adityanath

உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு  என அறிவித்தார். இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில்,  உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக … Read more

#Justnow:பரபரப்பு…உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிஹாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை … Read more

#BREAKING: உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே மைதானத்தில் உபி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்  யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவ்விழாவில் உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் … Read more

யோகி ஆதித்யநாத்துக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகின்றனர். தமிழகத்தையும், திமுகவையும் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான். பாஜக அரசு ஆளும் உத்தர … Read more

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும் – முதல்வர் யோகி ஆதித்யநாத் 

உத்தரபிரதேசத்தில் இதுவரை 5,61,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 5,32,349 பேர் குணமாகி 8,011 பேர் இறந்துள்ளனர்.   இந்நிலையில், கோரக்பூரில் எய்ம்ஸில் நடைபெற்ற பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல்வர் யோகி பேசுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற நாங்கள் ஒரு மாதம் தொலைவில் உள்ளோம். கொரோனா ஏற்கனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், மாநில அரசாங்கத்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து, உலக சுகாதார அமைப்பும் இதைப் பாராட்டியுள்ளது … Read more

உ.பி.யில் 5 மாதத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை.. யோகி அரசு அதிரடி.!

தீபாவளிக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு “மிஷன் ரோஸ்கர்”  என்ற திட்டத்தை தொடங்கத் தயாராகி வருகிறது. இது வேலையற்றவர்களுக்கும்,வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாகும். நவம்பர் 2020 முதல் 2021 மார்ச் வரை மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கை  உத்தரபிரதேச அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசு முயற்சிகளின் உதவியுடன், தனியார் துறைக்கு பல புதிய வாய்ப்புகளும் … Read more

காங்கிரஸ் சாதி வெறுப்பையும் தூண்டி விடுகிறது- யோகி குற்றச்சாட்டு..!

உத்திரபிரதேசத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்ப நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், காங்கிரஸ் தொழிலாளர்களுக்காக பேருந்து இயக்குவதாகக் கூறி சதி வேலையில் ஈடுபட்டது. காங்கிரஸ் சதி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், சாதி வெறுப்பையும் தூண்டி விடுகிறது என தெரிவித்தார்.

முன்னாள் வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னாள்  பணியாளர்களுக்கான குரூப் ‘சி’ பதவிகளில் இருப்பவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த வேலைக்கு தகுதி பெற ஒருவர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மட்டத்திலும் ‘கிடைமட்ட அடிப்படையில்’ இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த … Read more

ஹத்ராஸ் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு யோகி பரிந்துரை..!

ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.