விவசாயிகளுடன் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலொழிய வீடு திரும்ப மாட்டோம் என உறுதியாக இருக்கும் விவசாயிகள், இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 8 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் இன்று 9-வது … Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது! ராகுல் காந்தி பேச்சு!

தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்  கலாச்சாரம்,பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது.  தமிழகம் முழுவதும் தை பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், ராகுல் காந்தி அவர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை புரிந்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்  கலாச்சாரம்,பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். … Read more

அவனியாபுரம் வந்தடைந்தார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ராகுல் காந்தி அவர்கள் மதுரை அவனியாபுரத்தை வந்தடைந்துள்ளார்.  இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண்பதற்காக தமிழகம் … Read more

உங்களுடன் தை பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன் – ராகுல் காந்தி

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தை பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன். இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி … Read more

நாளை ராகுல் காந்தி வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி மதுரை … Read more

பொங்கல் பண்டிகையையொட்டி ராகுல் தமிழகம் வருகை ! ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி … Read more

10 குழந்தைகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி ,ராகுல் காந்தி இரங்கல்

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்  குழந்தைகள் இறந்ததற்கு பிரதமர் மோடி ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள  மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் இறந்ததாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், துயரமடைந்த குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இரங்கல் : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ … Read more

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! பொங்கலுக்கு பின் ராகுல் காந்தி வர வாய்ப்பு

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும்  மக்கள் நீதி … Read more

ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்தியாகிரக போராளி தான்!

ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான். அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது  மாதமாக தொடர்ந்து வருகிற நிலையில், போராட்டத்துக்கு முடிவு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் எந்த முடிவும் … Read more

NEWYEAR2021: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து.!

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் … Read more