தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுகிறார்கள்! நடிகர் தனுஷ் குற்றசாட்டு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  சமீபத்தில் வெளியான மாரி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர், நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விருதுக்காக படம் எடுக்கவில்லை என்றாலும், வடசென்னை, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன் … Read more

கொலைகாரன் படத்திற்கு போட்டி போடும் பட தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு … Read more

கைமாறுகிறதா வெங்கட்பிரபுவின் “பார்ட்டி” திரைப்படம்!!

மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் படத்தை நடிகர் அஜித் மூலம் தமிழ்திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தற்போது பல முன்னனி நடிகர்களை வைத்து இயக்கும் படம்தான் பார்ட்டி. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.பார்ட்டி படத்தின் இசை வேலையை  நடிகர் பிரேம் ஜி கவனித்து வருகிறார். படத்திற்கான முதல் காப்பி தயாரான நிலையில் அதனை வாங்க லைகா நிறுவனம் அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியவாறு தெரியவில்லை என தெரிகிறது. இதனால் இயக்குனர் வெங்கட்பிரபு மிகுந்த யோசனைக்கு பின்பு … Read more

தியேட்டர்களில் நடக்கும் உழல் பற்றி விவரித்த தயாரிப்பாளர் !

தமிழ் சினிமா  எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வரும் மார்ச் 16ம் தேதியில் இருந்து சினிமா ஸ்டிரைக். தயாரிப்பாளர் தாய் சரவணன்தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களக்கு நஷ்டம் ஏற்படுவது டிக்கெட்டினால் தான் என்று ஒரு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார். ஒருமுறை திருச்சிக்கு அஜித்தின் வீரம் படம் பார்க்க சென்றிருந்தேன். அப்போது புதுவித டிக்கெட் விற்பனையை பார்த்தேன். ஐந்து பேருக்கு ஒரு டிக்கெட்டை கிழித்து உள்ளே அனுப்புகிறார்கள். மற்ற 4 டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்கிறார்கள். இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு எப்படிபட்ட பிரச்சனை கொடுக்கும் … Read more

தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து?

தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளது. க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்கக் கோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை. மேலும், 8% கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி திரையரங்கு உரிமையாளர்கள் வரும் 16-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் … Read more

'துருவங்கள் 16' புகழ் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

    அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கிய படம் ‘துருவங்கள் 16’. இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு   https://twitter.com/karthicknaren_M/status/950991223753330689 Signed my … Read more