மகாராஷ்டிரா: அக்டோபர் 22 முதல் திரையரங்குகள் திறப்பு..!

மகாராஷ்டிராவில் வருகின்ற அக்டோபர் 22 முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் … Read more

#BREAKING : 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி…!

 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.  அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6ம் தேதி வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, … Read more

திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை…!

திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், 110 நாட்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் காணப்படுகிறது. இதனை அடுத்து, திரையரங்குகளை … Read more

இன்று முதல் 50% வாடிக்கையாளர்களுடன் ஆந்திராவில் தியேட்டர்கள் திறப்பு…!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த … Read more

திரையரங்கு திறப்பு எப்போது..? அமைச்சர் சாமிநாதன் விளக்கம்..!

கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் திரையரங்குகள் மூடப்பட்டது. பின்னர், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்தது. இதைத்தொடர்ந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா 2-வது பரவ தொடங்கியதும் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், கொங்குநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை  திறக்க உத்தரவிடுமாறு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.  சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் … Read more

#Breaking : திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கை…!

வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,  திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கொரோனா நடத்தை படி, வரும் 10-ம் தேதி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள … Read more

மாஸ்டர் படம் பார்க்க மலேசியாவிலிருந்து சென்னை வந்து ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்த தீவிர ரசிகை!

விஜய் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான அன்பினால் மலேசியாவில் உள்ள அவரது ரசிகை ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்து மலேசியாவிலிருந்து தனது குடும்பத்தினர் முழுவதையும் கூட்டி வந்து படம் பார்த்து சென்றுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில … Read more

திரையரங்குகளில் 50%-க்கும் அதிகமானோரை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி!

திரையரங்குகளில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வருடம் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் இந்தியாவிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள், பள்ளிகல்வித்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய … Read more

நடிகர் நடிகை உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளம் காப்பாற்றும் – நடிகை வித்யாபாலன்

தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி  தளங்கள் காப்பாற்றும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகமே முடக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான புதிய படங்கள் ஓ.டி.டி  தளங்களில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஓ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி … Read more