கொலைகாரன் படத்திற்கு போட்டி போடும் பட தயாரிப்பாளர்கள்!

கொலைகாரன் படத்திற்கு போட்டி போடும் பட தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube