உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதேபோல்  நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த … Read more

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார்  விசாரணை தொடக்கம்!

சி.பி.சி.ஐ.டி., போலீசார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி … Read more

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற, தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்களை போலீசார் வெளியேற்றினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

விரைவில் ஸ்டாலின் தலைமையில் புதிய சட்டமன்றம்!கருணாஸ் உறுதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர். திமுகவின் மாதிரி சட்டப்பேரவையில் கருணாஸ் பேசுகையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டும் என்று தான் நினைத்தார்கள். இது நிர்வாக சீர்கேட்டின் அடையாளமாகவே இருக்கிறது என்று  திமுகவின் மாதிரி சட்டப்பேரவையில் கருணாஸ் பேசியுள்ளார். ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவம் பேரவையில் பேசியதால் பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். … Read more

மதுரை ஆதீன மடத்தில் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை! உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஜூன் 18 வரை தடை  விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட உத்தரவில்,  மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்கள் வெளியேற்றம்!

தூத்துக்குடி செல்லும் முன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டி: இது குறித்து அவர் கூறுகையில், நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றும் ரஜினி கூறினார்.திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். இந்நிலையில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து!நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் ஒருங்கிணைந்த நாடார் சங்கத்தினர் தங்களின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் த.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பொருளாளர் மயிலை எம்.மாரித்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், … Read more

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் திமுக அறிவித்தது.இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர். நேற்று  பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது: துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை முதலமைச்சரின் அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை” என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாட்கள் … Read more

நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது!பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்று  முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என்று  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை!

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இன்று  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர்  ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்தது .மேலும்  ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனு ஜூன் 5க்கு ஒத்திவைத்தது. சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய … Read more