ஐபிஎல்லில் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் கேட்ட தோனி!மறுத்தது யார் ?தோனி விளக்கம்

3-வது முறையாக  ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். … Read more

ஆய்வில் திடுக் தகவல்!முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் தேவை அதிகரிப்பு!

கடந்த மே மாதத்தில் இந்தியாவில்  பெட்ரோல், டீசலின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வில், கடந்த ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் டீசல் பயன்பாடு 35 புள்ளி 2 மில்லியன் டன் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம் என்றும், … Read more

உரிய இழப்பீடு சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு வழங்கப்படும்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ,தமிழகத்தின் முன்னோடி திட்டமான சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு தேவையான நிலத்தை மட்டுமே அரசு எடுக்கும் என தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய உத்திரமேரூர் திமுக எம்.எல்.ஏ., சுந்தர் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துப் பேசினார். அப்போது, சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும், விவசாயிகள் விருப்பப்பட்டால் மாற்று நிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தம்மை சபாநாயகர் தரக்குறைவாக நடத்தியதாக விஜயதாரணி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, சட்டப்பேரவையில் சபாநாயகர் தம்மை தரக்குறைவாக நடத்தியதாக  குற்றம்சாட்டியுள்ளார். பேரவையில் தனது தொகுதிப் பிரச்சினையை எழுப்ப முயற்சி செய்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். ஆனால் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜயதாரணியை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து விஜயதாரணி தான் வெளியேற்றப்பட்டது குறித்து எடுத்துக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆன்லைனில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்போருக்கு, வெளிப்படைத் தன்மையுடன் முன்னுரிமை அளிக்கப்படுவதாக,  தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக, இந்தியர்கள் 5 ஆயிரத்து 310 பேரும், வெளிநாட்டினர் 53 பேரும் காத்திருப்பதாக கூறினார். இந்த நிலையில், வெளிநாட்டினர் 10 பேருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய எம்.எல்.ஏ. பிரின்ஸ், இதில் வெளிநாட்டினருக்குத் தான் முன்னுரிமையா என்றும் … Read more

ட்ராபிக்கை புகழ்ந்து தள்ளிய பிரமாண்ட இயக்குனர்!அவரு இந்தியன்,அந்நியன் என பட டைட்டில்களை கூறி வாழ்த்திய இயக்குனர்!

இயக்குநர் ஷங்கர் கத்தி எடுக்காத ‘இந்தியன்’, வயசான ‘அந்நியன்’ அம்பி என டிராஃபிக் ராமசாமியைப் புகழ்ந்துள்ளார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவர் பெயரிலேயே டிராஃபிக் ராமசாமி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்கி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஷங்கர், “டிராஃபிக் ராமசாமி, … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்கு!விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தற்போது பால்வளத்துறை அமைச்சராக தமிழகத்தில் பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு புகார் அளித்திருந்தார். அமைச்சர் ஆன பிறகு அதிக அளவில் அவர் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அவரது மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர … Read more

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது யூனிட் கட்டுமான பணி மேற்கொள்ள 2016இல் தரப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் … Read more

பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டம் காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில்  காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 143 அடி உயரமுள்ள காரையார் அணையின் நீர்மட்டம் 64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 667 கனஅடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 84 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 58 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி … Read more

25 புதிய துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும் !முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி,  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தின் மின்நிறுவுதிறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றும் என்றும் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிட்ட அவர், பல்வேறு மாவட்டங்களில் 5 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். ஊரகப் … Read more