நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது – புத்தகம் வெளியிட்ட மக்களவை செயலகம்..!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை … Read more

#Breaking:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி.யாக பதவியேற்பு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்பிக்களில் 24 பேர் தற்போது டெல்லியில் பதவியேற்றுள்ளனர்.அவர்களில் குறிப்பாக,கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல்,காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் உள்ளிட்டோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுள்ளனர்.புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியை இன்று மாலை புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். … Read more

#Breaking:5ஜி அலைக்கற்றை ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி  அண்மையில் அறிவித்திருந்தார். பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,பொது … Read more

#BREAKING: மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான நேரம் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 பெரும் … Read more

#Breaking:மாநிலங்களவை தேர்தல் – அரசியல் கட்சியினர் 6 பேர் போட்டியின்றி தேர்வு?..!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் … Read more

#BREAKING: நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் – சபாநாயகர்

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை. இலங்கையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனிடையே அரசுக்கு எதிராக நடைபெற்ற … Read more

#Breaking:உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம்- AICTE உத்தரவு

உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை … Read more

#BREAKING: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு. பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை தொடர்ந்து, புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இரவு 8 மணிக்கு மேல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடியது.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என … Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் – பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது!

இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பதாக தகவல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி … Read more