#BREAKING: மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான நேரம் இன்று 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 பெரும் … Read more

ஓர் அலசல்! மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? இதோ!

டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். மாநிலங்களவை தேர்தல்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. … Read more

#BREAKING: செப்டம்பர் 13ல் தமிழகத்துக்கு ராஜ்யசபா தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா (மாநிலங்களவை) இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக … Read more

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனுக்கள் மீது பரிசீலனை

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுவையும் தாக்கல் … Read more

மாநிலங்களவைத் தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

அதிமுக சார்பில் மாநிலங்களவைத்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கே.பி.முனுசாமி,தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் தங்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கை நிராகரிப்பட்டது. அதிமுக வேட்பாளர்கள் தம்பிதுரை ,கே.பி.முனுசாமி மற்றும் … Read more

மாநிலங்களவைத் தேர்தல் – நாளை வேட்புமனு தாக்கல்

அதிமுக சார்பில் மாநிலங்களவைத்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை  வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கே.பி.முனுசாமி,தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் தங்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கை நிராகரிப்பட்டது.இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் தம்பிதுரை ,கே.பி.முனுசாமி மற்றும் … Read more

மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி , திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.