ரயில்வே அமைச்சகத்தின் முன்மொழிவில் ‘இந்தியாவுக்கு’ பதில் ‘பாரத்’! வெளியான தகவல்!

railway ministry

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு ‘இந்தியா (I.N.D.I.A)’ என பெயர் வைத்து செயல் பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என்றே கூறலாம். தற்போது, இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற பாஜகவினர் இடையே குரல் எழுந்தது. அந்தவகையில் இந்தாண்டு ஜி20 … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி! உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு – மத்திய அமைச்சரவை முடிவு!

Anurag Thakur

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் … Read more

#Breaking:5ஜி அலைக்கற்றை ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி  அண்மையில் அறிவித்திருந்தார். பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,பொது … Read more

அடுத்த ஆண்டு தேர்தல் – உ.பி அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் ..!

உத்தரபிரதேச மாநில அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சரவையை இன்று மாலை விரிவாக்கம் செய்ய உள்ளார்.இன்று மாலை 05:30 மணிக்கு லக்னோவில் உள்ள ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. அதன்படி,காங்கிரசில் இருந்து பிஜேபிக்கு மாறிய ஜிதின் … Read more

#BREAKING: தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு – மத்திய அரசு

தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய முறைப்படி துறை ரீதியான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  அதன்படி, தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், … Read more

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 90 % பேர் மில்லியனர்கள்….42% பேர் மீது கிரிமினல் வழக்கு…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதன்மூலம், பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உள்ளது. இந்நிலையில்,நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களில், குறைந்தது 42% பேர் மீது கொலை, … Read more

மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை – அமைச்சரவை ஒப்புதல்!

மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பேசப்பட்டதுடன் மின் கட்டணம் குறித்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. மின் இழப்புகளை குறைப்பது, நுகர்வோருக்கு தரமான மற்றும் நம்பகமான மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவது குறித்த திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் விவசாய மின் இணைப்பு தவிர்த்து மற்ற அனைத்து … Read more

#Breaking:மீண்டும் பாஜகவுடன் உடன்பாடு;புதுச்சேரி அமைச்சரவை 14 ஆம் தேதி பதவியேற்பு..!

புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக. இடையே உடன்பாடு. அமைச்சர்கள் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி பதவியேற்பு. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை,பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் … Read more

மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல்…! இனிமேல் வீட்டின் உரிமையாளருக்கு 2 மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்…!

நேற்று மத்திய அமைச்சரவை குழு மாதிரி வாடகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய சட்டங்களை கொண்டு வரவும், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும் மாதிரி வாடகை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, … Read more

சத்தீஸ்கரில் விரிவடையும் அமைச்சரவை… 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சரவையில் தற்போது 9 பேர் புதிய அமைச்சர்கள்  பதவியேற்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது.சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய  முதல்வராக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றார்.அப்போது முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியுடன் சேர்ந்து வெற்றி பெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அம்மாநில அனைத்து அரசு துறைகள் , அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் … Read more