நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் … Read more

நாடு திரும்பியவர்கள் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய ஏற்பாடு – வெளியுறவுத்துறை அமைச்சர்

உக்ரைனில் மருத்துவ படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்கள் பற்றி மக்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பை நிறைவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு. உக்ரைனில் இருந்து … Read more

#BREAKING: எந்த சூழ்நிலையிலும் அதிபர் பதவி விலகமாட்டார் – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் பதிவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என அறிவிப்பு. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இந்த நிலையில், எந்த சூழ்நிலையிலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக போவதில்லை என இலங்கை நாடாளுமன்றத்தில் … Read more

இன்று கூடும் நாடாளுமன்றம்.. இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூட்டம் நடப்பதால் துணை சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி … Read more

#BREAKING: இலங்கையில் பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி!

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கிறது மகிந்த ராஜபக்ச அரசு. இலங்கையில் ஆளும் (மகிந்த ராஜபக்ச அரசு) எஸ்எல்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் … Read more

#BREAKING: மாநிலங்களைவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன்!

நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன். டெல்லி நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதாவது, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை நிலுவையில் வைக்க கூடாது என்றும் இது … Read more

#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார். திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார். சந்திப்பு: நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை: … Read more

மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் – மத்திய நிதியமைச்சர்

நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி. டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். பெட்ரோல், … Read more

ஓர் அலசல்! மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? இதோ!

டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். மாநிலங்களவை தேர்தல்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. … Read more

பதவி தப்புமா? – இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான்கானே ககாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் கட்டி வரும் நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more