தேசிய கொடியை வைத்து ஸ்கூட்டியை சுத்தம் செய்த நபர்! வைரலாகும் வீடியோ

தேசியக் கொடியை வைத்து ஒருவர் தனது ஸ்கூட்டியை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், 52 வயது முதியவர் தனது இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது வெள்ளை நிற ஸ்கூட்டரை தேசிய கொடியால் சுத்தம் செய்து தூசி துடைப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை … Read more

#Breaking:21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியக் கொடி ஏற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

டெல்லி:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார்.அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது.தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது.இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில்  தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று … Read more

#Breaking:”ஒரு மாதத்திற்குள் இதனை அகற்ற வேண்டும்…விளம்பரப்படுத்துங்கள்” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய,மாநில சின்னங்கள்,முத்திரைகள்,ஸ்டிக்கர்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை,ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசு,அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துகின்றார்.எனவே,அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போட்டோ என்பவர் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தேசிய,மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக,காவல்துறை … Read more

கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கில் நிறுவப்பட்டுள்ளது…!

கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே எனும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1000  கொண்டது என கூறப்படுகிறது. காலையில் நடைபெற்ற தேசிய கொடியை நிறுவும் நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், … Read more

பிரணாப் முகர்ஜி மறைவு: அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்.!

பிரணா‌ப் முகர்ஜியின் மறைவை அடுத்து நாடு முழுவதும் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்ப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணா‌ப் முகர்ஜி காலமானார். இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரணா‌ப் முகர்ஜியின் மறைவை அடுத்து நேற்று ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு நாட்கள் … Read more

சாதிய வெறிக்கு சவுக்கடி கொடுத்த அமிர்தம்! தடைகளை தகர்த்தெறிந்து இன்று தேசிய கொடியை ஏற்றினார்!

தடைகளை தகர்த்தெறிந்து இன்று தேசிய கொடியை ஏற்றினார் அமிர்தம். திருவள்ளூர் அருகே பட்டியலின ஊராட்சிமன்ற தலைவரான திருமதி.அமிர்தம் அவர்களை, ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் அவர்கள், கொடியேற்ற அனுமதி மறுத்துள்ளார். இதனையடுத்து, ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஊராட்சிமன்ற துணை தலைவரின் கணவர் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆத்துப்பக்கம் ஊராட்சி தலைவரை அழைத்து நேரில் விசாரிக்கவுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி … Read more

பாகிஸ்தானியர்களிடம் இருந்து இந்திய தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிகையாளர் !

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து.பாகிஸ்தான் பல வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் கருப்பு தினமாக கடைப்பிடித்தனர். ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை கூறி லண்டனில்  உள்ள இந்திய தூதரகம் முன்பு இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சார்ந்த சிலர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட  பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது இந்திய தேசிய கொடியை கிழிந்தும் … Read more

லடாக்கில் தேசிய கொடியை ஏற்ற உள்ள தோனி !

தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவியில் உள்ளார். தோனி அவ்வப்போது இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தோனி பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து கடந்த ஜூலை 31 -ம்  தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பயிற்சி பெற்று வருகிறார். சில தினங்களுக்கு ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 பிரிவின் படி கொடுக்கப்பட்டு வந்த அந்தஸ்த்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இதை … Read more

ஜம்மு காஷ்மீர் கொடியுடன் , தேசிய கொடி பறந்தது !

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த   மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.  மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக … Read more

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படு வரும்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டு இருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு, கறுப்பு கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையின் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள் சார்பில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் “எப்போது சுதந்திர தினம்” என குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர்.பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு … Read more