புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது-முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தற்போது புதிதாக தேர்வு முறையையும், தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. மேலும்  புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் அமைப்பதன் மூலம் புதுச்சேரி, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்று புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்த முடிவு -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில்,மத்திய பட்ஜெட்டில் அதிகமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதற்கான நிதி எங்கிருந்து வரும் … Read more

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  தனது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த்தார்.அதில், தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது.துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தரம் தாழ்ந்து உள்ளது.தமிழகத்தை பற்றி பேச கிரண்பேடிக்கு என்ன அவசியம், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு … Read more

கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு, அதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில்,நிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டுகளை தொடங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருக்கவும் சுகாதார துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால் ஆதி திராவிடர் துறையை, ஆதி திராவிடர் … Read more

நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்  கூறுகையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது .எனவே  இளம் மாணவர்களை காக்கும் விதமாக நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியை தூக்கியெறிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயார்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக … Read more

இன்று பள்ளிகள் திறக்கப்படாது ! ஜூன் 10ம் தேதி திறக்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பல இடங்களில் கோடை வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் தமிழக அரசு அனைத்து  பள்ளிகளும் இன்று  உறுதியாக திறக்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில்  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரியில் இன்று (ஜூன் 3-ம் தேதி)திறப்பதற்கு  … Read more

இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெரும்! ஸ்டாலின் தான் முதல்வர்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் அளித்த பெட்டியில், ;புதுச்சேரியில் எங்களது ஆட்சியை களைத்து பாஜக எப்படி ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டியதோ அதேபோல, தற்போது டில்லியில் பாஜக செய்து வருகிறது’ என விமர்சித்தார். மேலும், ; தற்போது தமிழகத்தில் நடக்கும் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெரும், ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பர் எனவும் தனது கருத்தை தெரிவித்தார். DINASUVADU

காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கிரண்பேடி மேல்முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம். புதுச்சேரி அமைச்சரவை நிதி ஒதுக்காது ஆளுநராக இல்லாமல் தனி நபராக கிரண்பேடி மேல்முறையீடு செய்யலாம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது .மத்தியில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தவுடன், நீட் … Read more