இன்று தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!

இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்று.மேலும் இந்த நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது . மேலும் ஜூலையில் 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டியது ஆனால் கண்டலேறு அணையில் இருந்து நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் … Read more

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  தனது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த்தார்.அதில், தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது.துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தரம் தாழ்ந்து உள்ளது.தமிழகத்தை பற்றி பேச கிரண்பேடிக்கு என்ன அவசியம், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு … Read more

தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டது-டி.ஆர் பாலு

தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டது என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு  பேசினார்.அப்போது அவர் கூறுகையில், சென்னை மாநகரம் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது .தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டன. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு … Read more

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் . அதன் பிறகும் மழை பெய்யாவிட்டாலும் 500 கனஅடி நீர் அக்டோபர் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 126 … Read more