இன்று தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!

இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்று.மேலும் இந்த நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது .

மேலும் ஜூலையில் 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டியது ஆனால் கண்டலேறு அணையில் இருந்து நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் மேலும் இதனை தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.