நாகாலாந்தில் பெட்ரோல், டீசல் வரிகள் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாறிவருகிறது. இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன எரிபொருட்கள் மீதான வரி லிட்டருக்கு 29.80%-லிருந்து 25%-ஆகவும், பெட்ரோல் விலை ரூ.18.26-லிருந்து ரூ.16.04-வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரி 17.50%-லிருந்து 16.50%-ஆக குறைவதால் டீசல் விலை ரூ.11.08-லிருந்து ரூ.10.51 வரை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என … Read more

அடேங்கப்பா: ஒரு ஊரே சேர்ந்து கீழே இருந்த லாரியே மேலே இழுத்து வந்த சம்பவம்.!

பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு … Read more

நாகாலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு!

சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு நாகலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் 1958-ம் ஆண்டு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு நாகாலந்தை பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையில் வைரம் கிடைக்கிறது! விசாரணைக்கு உத்தரவிட்ட நாகலாந்து அரசு!

நாகலாந்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணைக்கு உதாராவுடப்பட்டுள்ளது.  இன்று சமூக வலைதளங்கள் பலரையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் தான் உலா வருகின்றனர். ஒரு செய்தி ஒருவருக்கு தெரிய வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அதை பதிவு செய்தாலே, பதிவிட்ட சில மணி நேரங்களில்  பெரும்பாலானோருக்கு அந்த செய்தி தெரிய வருகிறது. அந்த வகையில், நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக … Read more

10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது…

நாடு முழுவதும்  இன்று 10 மாநில சட்டசபை  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி  மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய … Read more

நாகாலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை – எச்சரிக்கும் போதகர்கள்!

சீனப் பெண் ஏசு வழிபாட்டு முறை நாகலாந்து மாநிலத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதால் மதபோதகர்கள் எச்சரித்து வருகின்றனர். சீனாவில் 1920 இல் நிறுவப்பட்ட பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை ஒன்று தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பெண்ணாக எழுந்தார் என்ற கருத்துடன் கூடிய இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் சீனாவில் அந்த வழிபாட்டு முறை தற்பொழுது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் … Read more

தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ!

தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ அவர்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்களுக்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாகலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 916 ஆக உயர்வு..!

நாகலாந்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று. நாகலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில் நாகலாந்தில் கொரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது, இதுகுறித்து நாகலாந்து சுகாதுறை அமைச்சர்  வெளியிட்ட ட்வீட்டில் 286 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் 14  பேருக்கு கொரோனா தொற்று உறுதியசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் நாகலாந்தில் … Read more

நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை!

நாகலாந்து நாட்டில் நாய் இறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில், நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திமாப்பூர் சந்தையில் நாய்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் தொடர்ச்சியாக அரசு இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கவிஞருமான பிரிதிஷ் நந்தி, நாய் இறைச்சிக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியிருந்த நிலையில், நாய் இறைச்சியை சாப்பிடுவது மனிதத் … Read more

புதிய வாகன சட்டத்திருத்தம்! நாகலாந்து லாரிக்கு 6.5 லட்சம் அபராதம் விதித்த ஒடிசா அரசு!

புதிய வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பலர் ஆயிரக்கணக்கான ருபாய் மதிப்பில் அபராதம் கட்டி வருவதை பார்த்து வருகின்றோம். சிலருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. தற்போது அதனை மிஞ்சும் வகையில் ஒடிசா மாநில அரசு நாகாலாந்தை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சரக்கு வாகனத்தில், ஆட்களை ஏற்றியது, காற்று மாசுபடுத்தியது, ஒலி மாசுபாடு போன்ற  விதிகளை மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.