நாகாலாந்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு!

சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு நாகலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் 1958-ம் ஆண்டு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு நாகாலந்தை பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்