நாகாலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை – எச்சரிக்கும் போதகர்கள்!

சீனப் பெண் ஏசு வழிபாட்டு முறை நாகலாந்து மாநிலத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதால் மதபோதகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சீனாவில் 1920 இல் நிறுவப்பட்ட பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை ஒன்று தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பெண்ணாக எழுந்தார் என்ற கருத்துடன் கூடிய இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் சீனாவில் அந்த வழிபாட்டு முறை தற்பொழுது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சீனாவில் இந்த முறை தடை செய்யப்பட்டிருந்தாலும் சீனாவின் அருகே உள்ள மாநிலமான நாகலாந்தில் இந்த இயேசு பெண் வழிபாட்டு முறை பரவிவருகிறது.

இதைதொடர்ந்து நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் போதகர்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள பலரும் சீனாவிலிருந்து வந்திருக்கக்கூடிய இந்த மின்னல் வழிபாட்டு முறை அல்லது சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை என்னும் தவறான உபதேசத்தில் இருந்து மக்களை மீட்கும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய நாகலாந்தின் மதபோதகர் ஒருவர், சர்வவல்லமையுள்ள கடவுளின் ஆலயம் என அழைக்கப்படக்கூடிய இந்த வழிபாட்டு முறை குறித்து நான் மிகவும் ஆர்வத்துடன் எச்சரிக்கிறேன்.

இது தானாக உருவாக்கப்பட்ட ஒரு குழு. கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், இது தவறான செய்தி பரப்புகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்முடைய சபைகளை இத்தகைய தவறான மதத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய இளைஞர் அமைப்பு செயலாளர், கடந்த மே மாதம் தான் நாகலாந்தில் இந்த வழிபாட்டு முறை பின்பற்றப் படுகிறது என்பதை அறிந்துகொண்டோம். இது சீனாவிலிருந்தும் சீன மக்களிடம் இருந்து வந்திருந்தாலும் தற்பொழுது நாகலாந்தில் வட கிழக்கு மாவட்டங்களில் பலர் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். சிலர் அதன் உண்மைத் தன்மை அறிந்து வெளியே வந்துவிட்டனர். சங்கங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.