காலதாமதம் செய்யாதீர்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யாதீர்கள் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை கையாளவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆரம்பம் … Read more

9 மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..!

நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் எச்சரிக்கை தொடர்ந்து, அவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, புயலில் சிக்கியதாகவும், மீனவர்கள் வந்த விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தகவல் வெளியானது. பின்னர், மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். … Read more

ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் பஹாடியா கொரோனாவால் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் முக்கியமாக அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலர் தொடர்ந்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக 1980 முதல் 1981 வரை செயல்பட்டவர் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகநாத் பஹாடியா. இவர் கவர்னராக பீகார், ஹரியானா … Read more

உத்தரபிரதேச வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தின் வருவாய் துறை மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அமைச்சர்  காஷ்யப் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து  கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தன் செல்கிறது. ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் கொரோனா காரணமாக அமைச்சர் கமல் … Read more

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் முதல் முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். கொரோனா பரவல் அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் பிரதிநிதிகளுடன் மோடியை ஆலோசித்து வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும்  கொரோனா வைரசின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு ஒரு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, … Read more

டவ்-தே புயல்.., இன்று பிரதமர் மோடி ஆலோசனை ..!

பிரதமர் மோடி இன்று டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவான நிலையில், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை  எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி  புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன்  ஆலோசனை … Read more

பிரதமர் கிசான் திட்டம் : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி…! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து … Read more

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? திமுக கண்டனம்..!

புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றி புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இதற்கிடையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதனால், தற்போது … Read more

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை..!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொலைபேசியில் உரையாடினார்கள். கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்கள். இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார்கள். தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான … Read more