ஒரே இரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ….!

மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில்  இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்பொழுது தேசிய மக்கள் கட்சி கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கான்ரட் கொங்கல் சங்மா என்பவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏ -க்கள் உள்ளனர். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் திடீரென நேற்று ஒரே நாளில் திரிணாமுல் … Read more

சத்தீஸ்கர் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணம் ….!

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் தான் தேவ்ரத் சிங். 52 வயதுடைய இவர் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தேவ்ரத் சிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Breaking:புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்:ஆளுநர் தமிழிசையுடன் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!

புதுச்சேரியில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசையை சந்தித்துள்ளனர். புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக,முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.15 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது.இறுதியாக … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…!

சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் … Read more

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாம் எம்.எல்.ஏ கைது…!

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதியில் கூடியிருந்த மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். … Read more

#BREAKING : சபாநாயகருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது…! – உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் … Read more

2 கோடி செலவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி … Read more

எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்..! – மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்.   சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறையில் இருந்தது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் … Read more

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அரசு தலைமை கொறடா அறிவிப்பு..!

வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். கழக … Read more