#Breaking:புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்:ஆளுநர் தமிழிசையுடன் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!

புதுச்சேரியில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசையை சந்தித்துள்ளனர்.

புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக,முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.15 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது.இறுதியாக மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது.மேலும்,வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசமானது முதற்கட்ட தேர்தலுக்கு அக்.22 ஆம் தேதியும்,இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அக்.27 ஆம் தேதியும்,மூன்றாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,புதுச்சேரியில் அவசரமாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தினங்களில், பண்டிகை காலங்கள் மற்றும் வார்டு இட ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் உடன் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறி, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமையில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில்,புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆளுநர் தமிழிசையுடன் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளனர்.மீண்டும் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்துகட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று  எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.