#BREAKING: மீண்டும் தர்மயுத்தம்.. ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டம். சென்னை மெரினாவில் கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். … Read more

ஜெயலலிதா 5-ஆம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி … Read more

‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’- மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்…!

கலைஞரின் நினைவிடம் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில், சென்னை … Read more

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துரைமுருகன், கேஎன் நேரு … Read more

இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதா நினைவிடம் திறப்பு…!

இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

இன்னுயிரை நீத்த 20 வீரர்களுக்கு நினைவுசின்னம்-கல்வானின் “வீரதீரர்கள்” என்று பொறிப்பு!

எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் எய்திய 20 இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதத்தில் அத்துமீறி அதிகாரத்தோடு நுழைந்து கூடாரங்களை அமைத்து மட்டுமின்றி தொடர்ந்து ஜூன் மாதத்தில் சீன – இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையிலான கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளில் ராணுவமும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டு போர் தொடர்பான பதற்றமான … Read more

மகாத்மா காந்தி பிறந்தநாள் : டெல்லியிலுள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது  நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என அழைக்கப்படக்கூடிய இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆகிய அன்பு தந்தை காந்தியடிகள் அவர்கள் மகாத்மா காந்தி என அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் முக்கிய காரணமாக இருக்கும் அவர் இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். போர்பந்தரில் அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த இவருக்கு இன்றுடன் 151 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. … Read more

ஜெ.ஜெ நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணி முடிவு… விரைவில் நினைவிடம் திறப்பு…

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்நிலையில் நினைவிடத்தில் ராட்சத அளவிலான பீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘50 ஆயிரத்து 422 சதுர … Read more