அதிகாலையில் நேர்ந்த சோகம்.., கொரோனா மையத்தில் தீ விபத்து.., 13 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் கொரோனா  மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வாசைஎன்ற இடத்தில் உள்ள கொரோனா  மையத்தின் ஐசியு வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆபத்தான … Read more

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 67,013 பேருக்கு கொரோனா ,568 பேர் பலி

கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாநிலத்தில் பல மருத்துவமனைகள் படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு சிரமப்பட்டு வரும் நேரத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 67,013 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 568 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றும்  568 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்  இரண்டாவது நாளாக இன்றும் அதே எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இதன் மூலம், செயலில் உள்ள சிகிச்சை பெற்று வருபவர்களின்  … Read more

இவர்தான் ரியல் ஹீரோ:தண்டவாளத்தில் விழுந்த குழந்தை..!உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இரயில்வே ஊழியர்..!

மகாராஷ்டிராவில்,இரயில்வே தண்டவாளத்தின் கீழே விழுந்த குழந்தையை,உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஓடிப்போய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள,வாங்கனி இரயில் நிலையத்தின் நடைமேடையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, தீடீரென்று கால் தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்தான்.அப்போது அதிவேகத்தில் தண்டவாளத்தில் விரைவு இரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.இதனைப் பார்த்த இரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கே என்பவர்,தன்னுயிரைப் பற்றி கூட பொருட்படுத்தாமல் உடனே ஓடிச் சென்று அச்சிறுவனை தூக்கி … Read more

மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.!

மஹாராஷ்டிராவில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கடந்த ஆண்டைப் போல மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு இருக்காது, ஆனால் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் மூடப்படும் என தெரிவித்தார். நாளை இரவு … Read more

ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: ஒரே நாளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனாவால், நாள் ஒன்றுக்கு 63,000- மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு, உட்பட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா … Read more

மராட்டிய உள்துறை அமைச்சர் ராஜினாமா ..!

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இன்று அனுப்பினார். சமீபத்தில்  உள்துறை அமைச்சர் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என  முன்னாள் மும்பை காவல்துறை ஆணையரிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தன் மீதான ஊழல் … Read more

போலீசாரின் நிர்பந்தத்தால் நிர்வாணமாக நடனமாடிய ஹாஸ்டல் பெண்கள்.!

போலீசாரின் நிர்பந்தத்தால் நிர்வாணமாக நடனமாடிய ஹாஸ்டல் பெண்கள் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ ஸ்வேதா மஹாலே எழுப்பிய விவகாரம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் பகுதியில் அரசாங்கம் நடத்தி வரும் விடுதியில் உள்ள பெண்களை படப்பிடிப்பின் போது போலீசார் மற்றும் சில ஆண்கள் இணைந்து நிர்வாணமாக நடனமாட வைத்துள்ளனர் .இந்த விவாகரத்தை சட்டமன்றத்தில் எழுப்பிய போது இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதுடன் நான்கு பேர் கொண்ட … Read more

மகாராஷ்டிராவில் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா.!

மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக சஞ்சய் ரத்தோட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.8ல் டிக்டாக் பிரபலம் பூஜா சவான் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமைச்சர் மீது புகார் எழுந்திருந்தது என்பது … Read more

மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்து கிடக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்து காணப்படுவதாக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அவர்கள் முதல்வராக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்காக எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்வது போன்ற சில அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று அம்மாநிலத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்கள் தான் காரணம் – மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள்!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததற்கு பொது மக்கள்தான் காரணம் என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் … Read more