மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 67,013 பேருக்கு கொரோனா ,568 பேர் பலி

கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மாநிலத்தில் பல மருத்துவமனைகள் படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு சிரமப்பட்டு வரும் நேரத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 67,013 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 568 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றும்  568 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்  இரண்டாவது நாளாக இன்றும் அதே எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

  • இதன் மூலம், செயலில் உள்ள சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 6,99,858 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தின் கொரோனாவால் இறப்பு விகிதம் 1.53 சதவீதமாக உள்ளது.
  • இதுவரை, அரசு 2,48,95,986 ஆய்வக மாதிரிகளை பரிசோதித்துள்ளது, அவற்றில் 40,94,840 பேர் வைரஸ் நோய்க்கு நேர்மறை (16.45 சதவீதம்) சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
  • வியாழக்கிழமை நிலவரப்படி, மகாராஷ்டிரா முழுவதும் 39,71,917 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 29,014 பேர் நிறுவன தனிமைப்படுத்தலிலும் இருந்தனர்.
  • வியாழக்கிழமை, 62,298 நோயாளிகள் குணமடைந்ததைத் வீடு திரும்பியுள்ளனர் , இதுவரை குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 33,30,747 ஆக உள்ளது.
  • மாநில தலைநகர் மும்பையில் 7,410 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில்  75 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நகரில் தற்போது 83, 953 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
author avatar
Dinasuvadu desk