அதிகாலையில் நேர்ந்த சோகம்.., கொரோனா மையத்தில் தீ விபத்து.., 13 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் கொரோனா  மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வாசைஎன்ற இடத்தில் உள்ள கொரோனா  மையத்தின் ஐசியு வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர் திலீப் ஷா தெரிவித்தார். நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில்  ஏற்பட்ட கசிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் அதிகமானனோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 67,000-க்கும் மேற்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா தொற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும்.

author avatar
murugan