மகாராஷ்டிராவில் மேலும் 732 பறவை உயிரிழப்பு..மொத்த எண்ணிக்கை 14,524 ஐ எட்டியது.!

மகாராஷ்டிராவில் 624 கோழிகள் உட்பட மேலும் 732 பறவைகள் உயிரிழந்துள்ளன. மகாராஷ்டிராவில் பறவைகள் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளியன்று, மாநிலத்தில் 624 கோழி பறவைகள் உட்பட 732 பறவை இறந்துள்ளது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,524 ஐ எட்டியுள்ளது. இதற்கிடையில், 11 மாவட்டங்களில் கோழி பறவைகள் இறப்பதற்கு காரணம் பறவைக் காய்ச்சல் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.  மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, புனே, சதாரா, பீட், … Read more

ஓடும் சொகுசு பேருந்தில் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.!

மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநர் உதவியாளரால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நகரும் தனியார் சொகுசு பேருந்துக்குள் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், கிளீனர் நகரும் பேருந்தில் தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புனேவின் ரஞ்சங்கான் பொலிஸாருக்கு அந்த பெண் புகார் அளித்தார், ஆனால் இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் நடந்த நிலையில், புனே காவல்துறை … Read more

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்.!

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு) ஏற்பட்ட தீ விபத்தால் 10 பச்சிளக் குழந்தைகள் பரிதமமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் இருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அனைவரும் பெரும் வேதனையை தந்துள்ளது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், … Read more

பாஜகவில் இணைந்த தலைவர்கள் கட்சிக்கு திரும்புவார்கள் – அஜித் பவார்

தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தலைவர்கள் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள் என்று மகாராஷ்டிரா  துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தார்கள். கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர்.இருப்பினும், இப்போது இந்த தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் … Read more

இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா.!

இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்கு திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25 க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து அவுரங்காபாத் மாவட்டத்திற்கு வந்த 44 நபர்களில் இந்தப் பெண்ணும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இங்கிலாந்து திரும்பியவர்களில் 11 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அறிகுறியற்றவர் என்று அவுரங்காபாத் மாநகராட்சியின் (ஏ.எம்.சி) சுகாதார அதிகாரி டாக்டர் நீதா படல்கர் தெரிவித்தார். அவரது மாதிரி புனேவை தளமாகக் கொண்ட … Read more

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்.!

மகாராஷ்டிராவில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நவி மும்பையில் வாஷி க்ரீக் பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள வாஷி க்ரீக் பாலத்தில் ஒரு பெண் கிடப்பதாக வாஷி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, ​​அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த … Read more

மீண்டும் நாளை முதல் ஜன.5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்.!

மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா வருவதையொட்டி, … Read more

மகாராஷ்டிராவில் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது.!

மகாராஷ்டிராவில் உள்ள காரத் ஜனதா சகாரி வங்கி லிமிடெட் உரிமத்தை போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டாததால் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. வங்கியின் டெபாசிட்டர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) நிறுவனத்திடமிருந்து தங்கள் வைப்புகளை முழுமையாக செலுத்துவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைப்பு நடவடிக்கைகளின் தொடக்கத்துடன், காரத் ஜனதா சகாரி வங்கியின் வைப்புதாரர்களுக்கு … Read more

பால்கர் கும்பல் வன்முறை வழக்கு: 47 குற்றவாளிகளுக்கு ஜாமீன்.! 

பால்கர் கும்பல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 47 பேருக்கு தானே மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மாவட்ட நீதிபதி பி.பி.ஜாதவ் குற்றம் சாட்டப்பட்டவர்களை ரூ .15 ஆயிரம் செலுத்திய பின் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சிந்தலி கிராமம் வழியாக அவா்களின் காா் சென்றபோது வழிமறித்து  ஒரு வன்முறை கும்பல் காரில் … Read more

8 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்.!

மகாராஷ்டிராவில் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டு 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லையென்றாலும் மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 5% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள 25,866 பள்ளிகளில் 9,127 பள்ளிகள் திறக்கப்பட்டது . மாநிலத்தில் … Read more