மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.!

மஹாராஷ்டிராவில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டைப் போல மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு இருக்காது, ஆனால் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் மூடப்படும் என தெரிவித்தார். நாளை இரவு 8 மணி முதல் மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், பின்னர், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும். மேலும், 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்  பொது போக்குவரத்து இயங்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

author avatar
murugan