தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முக்கிய அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவார்த்தை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.   தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என சங்கர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி மனுதாக்கல் செய்த … Read more

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

விதிகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்று அதிமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கு தொடுத்திருந்தது.

உள்ளாட்சி தேர்தல்: பாஜகவுக்கு பெரும் பின்னடைவு- 498 இடங்களில் காங்கிரஸ் வெற்றி !

கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கர்நாடகாவில் ஆளும் பாஜகவை காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளி, உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 1184 வார்டுகளை உள்ளடக்கிய 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 வார்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தைப் … Read more

உள்ளாட்சி தேர்தல்;”தில்லுமுல்லு திமுக சாயம் வெளுத்த நரி” – ஓபிஎஸ்,இபிஎஸ் குற்றச்சாட்டு…!

உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசு இயந்திரத்தையும், அரசு அதிகாரிகளையும் தன்னுடைய கைப்பாவைகளாக மாற்றி வெற்றிபெற திமுக முயலுமென்று அதிமுக தலைமை ஓபிஎஸ்,இபிஎஸ் குற்றம் சாற்றியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் செல்வாக்கு அதிமுகவுக்குதான் இருக்கின்றது என்பதை பறைசாற்றும் விதமாக அதிமுக உடன்பிறப்புகளின் தேர்தல் பணிகள் அமைய வேண்டும் என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் தவறுகள்;மக்களிடம் ஆணித்தரமாக கொண்டு … Read more

“ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் முரசு சின்னத்திற்கு கிடைக்க வேண்டும்”- தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்..!

தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து, மாபெரும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதனால்,கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்,கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் நாட்டுக்கும், தேமுதிக கட்சிக்கும் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல் என்று தேமுதிக … Read more

இன்று முதல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்…!

இன்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை முதல் தேர்தல் … Read more

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை….!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது.  தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள், விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் … Read more

#BREAKING: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் … Read more