புதிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Jyothi Nirmalasamy: தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? – வெளியான முக்கிய தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பாணையை வருகின்ற 22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு வருகின்ற ஜன.24 ஆம் தேதி வர இருப்பதால்,ஜன.22 ஆம் தேதியே … Read more

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

விதிகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்று அதிமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கு தொடுத்திருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – நவ.1ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1ம் தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட … Read more

#BREAKING: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, … Read more

#BREAKING: உள்ளாட்சி தேர்தல் – 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திங்களன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு … Read more

உள்ளாட்சித் தேர்தல்: இவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் விவரங்களை … Read more

#Breaking: வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல்செய்ய உத்தரவு.!

13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10  வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் … Read more

உயர்நீதிமன்றம் உத்தரவு.! மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் விடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று விடுத்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் … Read more

BREAKING: 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவு.!

முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மறுவாக்குப்பதிவு 30 வாக்குச்சாவடிக்கு  நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது மூன்று வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன் படி முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை … Read more