நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:இன்றே கடைசி நாள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று  மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. … Read more

திமுகவின் நிலை என்ன? பாஜகவுடன் தொடர் இழுபறி – இன்று வெளியாகும் அதிமுகவின் 2ம் கட்ட பட்டியல்?

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய … Read more

#Election2022: திமுக – காங்கிரஸ் இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மார்சிஸ்ட் … Read more

வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்  மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி – இன்று வெளியாகும் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரம்காட்டி வரும் நிலையில், இன்று தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல். தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதும்கூட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனைதொர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 … Read more

#BREAKING: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தலைமை தேர்தல் அதிகாரி!

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு. 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டியிருந்தது. ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 … Read more

#BREAKING: உள்ளாட்சி தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், தற்போது 6 மணியுடன் நிறைவு பெற்றது.

#BREAKING: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, … Read more

#Breaking: 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு..!

2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பேரவைத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி அவர்களும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் அவர்களும் வெற்றி பெற்றனர்.எனினும்,இருவரும் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர். இந்த நிலையில்,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் … Read more