உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் – அதிமுக அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட … Read more

தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி -போஸ்டரால் பதவியேற்க தடை விதித்த நீதிமன்றம்!

சிவகங்கையில் தேவி மாங்குடி  என்பவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர்  பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியான சங்கராபுரத்தில் பெண்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த … Read more

மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் – திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில்  எடப்பாடி , சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றம்  வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது … Read more

#Breaking : பள்ளிகள் திறக்கும் தேதி 3வது முறையாக மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு  3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக  தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது … Read more

உள்ளாட்சித் தேர்தல் முடிவு-மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- துணை முதலமைச்சர் பேட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதிமுக அதனை தலை வணங்கி ஏற்றக்கொள்ளும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி  தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட கவுன்சிலர் … Read more

உள்ளாட்சித் தேர்தல் : 26 மணி நேரத்தை கடந்தும் வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  வாக்கு எண்ணிக்கை 26 மணி நேரத்தை கடந்தும் தொடர்கிறது. தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி … Read more

இந்த “11 ஆவணங்கள்” இருந்தால் தேர்தலில் வாக்களிக்கலாம்.! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோருக்கு ஓர் அறிவிப்பு. 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாகும், அந்த அட்டையை வைத்துதான் நம் ஓட்டை பதிவிட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். அதற்காகத்தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், … Read more

அதிமுகவிற்கு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மரண அடி – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும், அதிமுக தோல்வியடையும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் … Read more

உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு -கருணாஸ்

முதலமைச்சர் பழனிசாமியை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்தித்தார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.கட்சிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்காட்டி வருகின்றது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்தித்தார்.இதன் பின்பு அவர் கூறுகையில்,  உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் … Read more

அனுமதி இன்றி எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் -ரஜினி மக்கள் மன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாருக்கும்  ரஜினி ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.  தன்னிச்சையாக எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி ஆகியவற்றின் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று … Read more