தூர்வாரிய போது…………தூங்கி கிடந்த 4 சிலைகள்……மீட்டெடுத்த பொதுமக்கள்….!!!

திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் புதைந்து கிடந்த 4 சிலைகளை பொதுமக்கள்  மீட்டுள்ளனர். திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் கோயில் நிலத்தில் இருந்து 4 கற்சிலைகளான பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம், திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள இடத்தை தூர்வாரும் போது 4 கற்சிலைகளை பொதுமக்கள் மீட்டனர். தோண்டி எடுக்கப்பட்ட பெருமாள், சக்கரத்தாழ்வார்,ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய 4 கற்சிலைகளையும் பொதுமக்கள் … Read more

” மாணவி விபத்தில் பலி ” வாகனங்கள் கண்ணாடி உடைப்பு..!!

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே இன்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 7 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி கண்மணி. ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண்யா (எ) சூலமெட்டி சேரன், … Read more

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்”பஞ்சபூத மகா” சாந்தியாகம்..!!

காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று  பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று  பஞ்ச பூத மகா சாந்தியாகம் நடைபெற்றது. நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், அதீத வெப்பம் போன்ற இயற்கை பேரறிவுகளின் தாக்கம் குறைய வேண்டி இந்த யாகம் நடைபெற்றது. மேலும்யாகத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர் பின் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தனர். DINASUVADU

காஞ்சி கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பிணக்குவியலுக்கு வைகோ கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் … Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தீ விபத்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே நடந்த ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டார். விழா நடந்துக்கொண்டிருக்கும் போது திடிரென்று தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆளுநர் அமர்ந்திருந்த மேடை எதிரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து கல்லூரியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் பத்திரமாக புறப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்,தமிழக ஆளுநர் மற்றும் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா ஆகியோர் பங்கேற்ற சமஸ்கிருதம் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக காவல்துறையானது தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை விஜயேந்திரரின் உருவபொம்மை எரிப்பு-மாணவர்கள் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு … Read more

 காஞ்சிபுரத்தில் தலித் கிறிஸ்த்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் … Read more

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 7 பேர் கைது…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை. source: http://dinasuvadu.com