திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் […]