தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை விஜயேந்திரரின் உருவபொம்மை எரிப்பு-மாணவர்கள் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்றார். இதனால் நேற்று முதல் இவருக்கு எதிர்ப்புகள் வந்து குவித்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தஞ்சையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவிர, விஜயேந்திரரின் உருவபொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் அவரது போஸ்டருக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் மக்கள் தங்களது ஆவேசத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment