அருப்புக்கோட்டை குறவர் சமூக குடும்பத்தை இழிவு படுத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்…

  அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை   ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. … Read more

திருவில்லிபுத்தூரில் ஆட்டோ டிரைவர் மீது நகைக்கடை அதிபர் கொலை முயற்சி…

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன்  என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன்  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள். ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை … Read more

சமூக அநீதி நீட்தேர்வை கைவிடக்கோரி..! சமூகநீதி போராளி சாவித்ரிபாய்பூலே பிறந்தநாளான இன்று (3.12.17) சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!

  சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர். சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர … Read more

 காஞ்சிபுரத்தில் தலித் கிறிஸ்த்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

திருக்கழுகுன்றம் அருகிலுள்ள சோகன்டி கிராமத்தில் 40 வருடமாக தலித் கிறித்தவர்கள் வழிபாடு நடத்திவந்த கெபிக்கு வரக்கூடாது என முன்னால் சாதி இந்துக்களும் இந்நாள் மதவெறி சாதி இந்துக்களும் தடை செய்திருக்கின்றனர். இதானால் தலித் கிறித்தவர்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்நிகழ்வில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தலித் கிறித்தவர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செயலாளர் சாமுவேல் … Read more