முதல் தீவிரவாதி ஒரு இந்து ! கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட விசாரணையை  நவம்பர் 22-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இன்று விசாரணைக்கு இந்த வழக்கின் விசாரணையை  நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் !

நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில்  நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முதல் தீவிரவாதி ஒரு இந்து ! கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா … Read more

இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது-கமல்ஹாசன்

நேற்று 10% இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது. இட ஒதுக்கீடு என்ற கனவு முழுமையாக பலிக்காத நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டுமா ? கமல் ஹாசன்

ஜூன் மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாதிப்படைந்தனர்.பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து … Read more

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது- நடிகர் கமல்ஹாசன்

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குறிய பேச்சு!முன் ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய கருத்து ஓன்று சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதும் இதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.மேலும் கமல் மீது பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அளித்த புகாரில் கமல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில், … Read more

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: ரஜினியை தொடர்ந்து கமலுக்கும் அழைப்பு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு ஏற்பு விழா வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. . இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து … Read more

அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி-கமலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கட்சி தொடங்கும் பிரகாஷ்ராஜ்

மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் அவர்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம்  இறங்கினார் .ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.மேலும் இதற்கு எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் … Read more

சர்ச்சை பேச்சு ! கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  கமலஹாசன் முறையிட்டார். ஆனால் … Read more