ஜனவரி 20 முதல் மீண்டும் வேலை நிறுத்தம்-அண்ணா தொழிற்சங்கம்..!

காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி … Read more

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன்  பேச்சுவார்த்தையை  கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து … Read more

தொழிலாளர்கள் போராட்டத்தில் இல்லை.. தலைவர்கள் தான் போராட்டத்தில் உள்ளனர்.! – அமைச்சர் சிவசங்கர்.

Minister Sivasankar - TN Bus Strike

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் … Read more

ஸ்ட்ரைக் நடந்தாலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

Minister Sivashankar

ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் … Read more

இதை செய்தால் சம்பளம் பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், ஊழியர்கள் விடுமுறை எடுக்க … Read more

#BREAKING: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைதொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.  இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் தலைமையில் இன்று … Read more

உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டுமா ? கமல் ஹாசன்

ஜூன் மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாதிப்படைந்தனர்.பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மக்களுக்காக, மக்களுடன் இணைந்து, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனத்தை தெரிவித்து … Read more

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியஸ்தர்கள்…!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.சண்முகம், கே.எம்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க தொழிற்சங்கங்கள் தங்களது தரப்பின் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.  

ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் உயிரிழப்பு…!!

திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்…!!

ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இப்போராட்டத்தினால் போக்குவரத்து வசதியின்றி பயணிகள் தவிக்கின்றனர்.