செட்டிநாடு குழுமத்தில் ஐடி ரெய்டு – ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.!

செட்டிநாடு குழுமத்தில் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வருமானத்தை கணக்கில் காட்டப்படாததும் தெரிய வந்துள்ளது. தமிழகம், ஆந்திர உள்பட செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் கடந்த 9-ஆம் தேதி நடந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். ரூ.110 கோடி வெளிநாட்டு சொத்துகளும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரூ.700 கோடி வருமானத்தை கணக்கில் காட்டப்படாததும் தெரிய … Read more

#ஐடி ரெய்டு : வருமான வரித்துறையின் வலையில் சிக்கிய மோகன்லால் நகைகடை குழுமம்! இத்தனை கோடி மறைக்கப்பட்டதா?

ரூ.500 கோடி சொத்தை மறைத்த மோகன்லால் குழுமம். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில்,  மோகன்லால் நகைக்கடை குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையில் வரி காட்டாமல், ரூ.400 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 50 … Read more

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை.!

ராஜஸ்தான் காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள முதல்வர் பதவிக்கு கடும் போட்டி … Read more

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புசெழியன் ஆஜர்

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார்.  நடிகர் விஜய்  மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையால் தெரிவிக்கப்பட்டது எனவே வருமான வரித்துறை … Read more

விஜய் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்! விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு இதுதானாம்!

நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் … Read more

வருமான வரித்துறை விசாரணைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்!

வருமான வரித்துறை விசாரணை நிறைவு. மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய விஜய்.  தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சந்தனு ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து வருமான வரித்துறை விஜயை அவரது காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமானதுறை தீவிர … Read more

ஜிஸ்டி +ரூ.126 கோடி சம்பளம்,விஜயை விட அவர் அதிக சம்பளம் வாங்குகிறார் -சீமான் பேட்டி

விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யாரென்று தெரியும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது … Read more

4 நாட்களாக தொடர் சோதனை ..! வேலம்மாள் குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு

வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் குழுமம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்த குழுமத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளிகள் ,கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதற்கு இடையில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை … Read more

கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார். வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டனர்.2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்கி ஆசிரமத்தில் நடத்திய ரெய்டு-ரூ.20 கோடி பறிமுதல்…!

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 -க்கும் மேற்பட்ட ஆசிரமத்தில் வருமான வரிதுறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது. நாடு முழுவதும் உள்ள 40 மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் , ஆப்பிரிக்க நாடுகளிலும் அதிக அளவில் நிலம் வாங்கியது வருமானவரிதுறை நடத்திய சோதனையில் தெரியவந்தது.சென்னை ஆயிரம் … Read more