ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை.!

ராஜஸ்தான் காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2018- ஆம் ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா இடையே போட்டியும், ராஜஸ்தானில்  அசோக் கெலாட் , சச்சின் பைலட்  இடையே  போட்டி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் இறுதியாக மத்திய பிரதேசத்தில் கமல்நாத்யும்,  ராஜஸ்தானில்  அசோக் கெலாட் முதல்வராக அறிவித்தனர்.

இதனால்,அதிருப்தியில் இருந்த சிந்தியா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் தனது ஆதரவை எம்எல்ஏக்கள் 23 பேருடன் இணைந்தார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து  பாஜக ஆட்சி அமைத்தது. ராஜஸ்தானில் உள்ள மொத்தம் 200 இடங்களில் காங்கிரஸ் 102, சுயேட்சை 13, பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் ஆதரவளித்தனர். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தனர்.

இதனால் காங்கிரசின் பல 108 ஆக உயர்ந்தது. தற்போது காங்கிரசுக்கு 125 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட்டுக்கு 20 முதல் 30 வரை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் சச்சின் பைலட் தனது எம்எல்ஏக்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி உள்ள  நிலையில், அங்கு உள்ள காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில்  வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் பாஜக கட்சிக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரி கட்சிக்கும் 3 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan