பழனியில் பிரபல பஞ்சாமிர்த கடையில் வருமான வரித்துறை ரெய்டு..!

பழனியில் உள்ள சித்தநாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர், அசோக் குமார். வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது புகார் வந்தது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில், பத்து நாட்களுக்கு முன்னர் அவரின் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ரூ. 93 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அசோக் குமாரின் வீட்டில் தற்பொழுது வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்களில் ஐ.டி ரெய்டு..ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது…!!

சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் , ஹாட் பிரட் பேக்கரி, கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனத்தில் கடந்த  3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்,  கடந்த 4 ஆண்டுகளாக வருவாயை மறைத்தும்,ரூபாய்  150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை

ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது சொத்து மற்றும் வரவு,செலவு ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது