ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விரைந்துனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்திய விமானப் படையினர் வழக்கமான … Read more

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!

Tejas Aircraft Crashes

plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் … Read more

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு!

AN-32(K-2743)

கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் … Read more

ஐஏஎஃப் பயிற்சி விமானம் விபத்து..! இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!

Pilatus PC 7 Mk-II

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் … Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணி

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வான்வெளி அத்துமீறலைத் தடுக்க இந்திய விமானப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க IAF அதன் போர் விமானங்களை சமீபத்திய வாரங்களில் 2-3 முறை ரோந்து பணியில் … Read more

மீண்டும் ஒரு துயரச் சம்பவம்….ராணுவ விமானம் விபத்து – விங் கமாண்டர் பலி!

ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை … Read more

#Breaking:”முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி”-இந்திய விமானப்படை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் … Read more

நிலவில் கால் பதிக்க தேர்வாகியுள்ள இந்திய வம்சத்தை சேர்ந்த அமெரிக்க விமான படை அதிகாரி!

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ்  எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் … Read more

இம்மாத இறுதிக்குள் 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை.! 22ஆம் தேதி முதல் தளபதிகளின் ஆலோசனை கூட்டம்.!

2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன போர் விமானமானது, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் விமானத்தை இயக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஃபேல் விமானங்களில் வரவுகளை அதிகபடுத்துமாறு இந்தியா பிரான்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் ஜூலை இறுதிக்குள் … Read more

கூடுதலாக SPICE-2000 bomb வாங்க இந்தியா திட்டம்..?

இஸ்ரேலில் இருந்து SPICE-2000 bomb  வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பாலாக்கோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல்களில்  பயன்படுத்தப்பட்ட SPICE-2000 bomb இஸ்ரேலில் இருந்து இந்தியா வாங்க என்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SPICE-2000 bomb நிலத்தடி இலக்குகளை ஒரு தூரத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாக்கும் திறனை கொண்டது. இதனை கடந்த ஆண்டு இஸ்ரேலில் இருந்து வாங்கிய குண்டுகள் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக இந்த குண்டுகள் வாங்க உள்ளதாக  என … Read more