ஐஏஎஃப் பயிற்சி விமானம் விபத்து..! இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!

Pilatus PC 7 Mk-II

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் … Read more

பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வெர்சன்! வெற்றிகரமாக சோதனை.!

பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை, சுகோய் ஜெட் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை நீண்ட தூரம் செல்லும் வகையில், அதன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையை இந்திய விமானப்படை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது குறித்து இந்திய விமானப்படை(IAF), தனது ட்விட்டரில், வங்காள விரிகுடா பகுதியில் Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. மேலும் கப்பலை இலக்காகக் கொண்டு பிரம்மோஸ் ஏவுகணை, துல்லியமான தாக்குதலை நடத்தி, ஏவுகணை விரும்பிய பணி இலக்குகளை அடைந்தது … Read more

#AgnipathScheme:அக்னிபத் திட்டம் – எத்தனை லட்சம் பேர் விண்ணப்பம் தெரியுமா? – இந்திய விமானப்படை அறிவிப்பு!

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதனிடையே,இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி … Read more

பிரிட்டனில் போர் விமான பயிற்சியில் இந்தியா பங்கேற்காது – ஐ.ஏ.எப்

பிரிட்டனில் நடைபெற உள்ள போர் விமான பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என இந்திய விமானப்படை அறிவிப்பு. ‘எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற பெயரில் இங்கிலாந்தின் வாடிங்டனில் மார்ச் 6 முதல் 27 வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேறக்காது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் இலகு ரக போர் விமானமான (LCA) தேஜஸ், இங்கிலாந்து மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப்படைகளின் போர் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க … Read more

மீண்டும் ஒரு துயரச் சம்பவம்….ராணுவ விமானம் விபத்து – விங் கமாண்டர் பலி!

ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை … Read more

#Breaking:”முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி”-இந்திய விமானப்படை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் … Read more

“இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி” – பிரதமர் மோடி வாழ்த்து…!

இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “விமானப்படை தினத்தில் நமது விமானப்படை … Read more

வரலாற்றில் முதல் முறையாக போர் விமானத்துக்கு தலைமை தாங்கிய முதல் பெண்.!

குடியரசு தின விழாவில், இந்தாண்டு விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானத்தை பெண் விமானி பாவனா காந்த் அணிவகுத்தார். நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், போர் விமானங்கள் பங்கேற்கும், கண்கவரும் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம். இந்நிலையில், டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய … Read more

இம்மாத இறுதிக்குள் 5 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை.! 22ஆம் தேதி முதல் தளபதிகளின் ஆலோசனை கூட்டம்.!

2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன போர் விமானமானது, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் விமானத்தை இயக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஃபேல் விமானங்களில் வரவுகளை அதிகபடுத்துமாறு இந்தியா பிரான்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் ஜூலை இறுதிக்குள் … Read more