#viral: எங்கும் கண்டிராத அதிர்ச்சி காட்சிகள்..!ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியிருந்த நிலப்பகுதி தானாக மேலெழும்பியது!

ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியுள்ள நிலப்பகுதி தானாக மேலே எழும்பும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவில் உள்ள ஒரு ஆற்றின் மேலே அங்குள்ள நிலத்தின் பகுதி மேலே உயர்ந்து வந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் மழை பெய்த பிறகு நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் இதனை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், நீருக்கடியில் மூழ்கிய நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து அதன் ஒரு சில பகுதிகள் இடிந்து … Read more

அரியானாவில் ஊரடங்கு ஜூலை 26 வரை நீட்டிப்பு..!

அரியானாவில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26 வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26 வரை நீடித்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குளிர்பானங்களுக்கு ரூ.4.5 ஜிஎஸ்டி விதித்ததால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்..!

பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த … Read more

ஹரியானாவில் ஜூலை 5 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம்..!

ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் காரணத்தால் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்: அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. மால்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்க அனுமதி. ஹோட்டல் மற்றும் மதுக்கடைகள் … Read more

#Breaking:ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 50 பேர் பலி – முதல்வர் மனோகர் லால் கட்டர்..!

ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பும் பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில்,ஹரியானாவில் இதுவரை கருப்பு பூஞ்சை … Read more

ஹரியானாவில் பெண்ணிடம் 20 நாள் கொரோனா சிகிச்சைக்கு 14 லட்சம் கட்டண கொள்ளை

ஹரியானவில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு கொள்ளை கட்டணம் வசூலிப்பு. இந்தியாவில் கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பேரிடர் சூழலை பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைக் கண்டித்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டிருந்தது. இருப்பினும் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனையடுத்து ஹரியானவில் உள்ள பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். … Read more

ஹரியானா கர்னால் மாவட்ட பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனுமிடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதும் இதற்கு காரணமாக அமைகிறது என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அதே போலதான் பல்வேறு இடங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் … Read more

வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை – ஹரியானா துணை முதல்வர்

வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்று ஹரியானா துணை முதல்வர் கூறுகிறார்.   புதிய மத்திய வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்றும், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு உறுதியான ஆலோசனைகளை வழங்குமாறு ஹரியானாதுணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று தெரிவித்தார். ஹரியானாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உறுதிப்படுத்த முடியவில்லை என்று நினைக்கும் நாளில் தனது ராஜினாமாவை வழங்குவதாக ஜன்னாயக் ஜந்தா கட்சி (ஜே.ஜே.பி) தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். இன்று செய்தியாளர் மத்தியில் … Read more

ஹரியானா அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இதுதான் – பாரத் பயோடெக் நிறுவனம்.!

கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்னவென்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.அவர் பகிர்ந்த பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் … Read more

கோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.!

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் .அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா … Read more