கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!

உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.  சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை … Read more

டெல்லி: நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த உலகின் முதல் நபர்..!

டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் … Read more

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செலவை கர்நாடக அரசே ஏற்கும் – கர்நாடக முதல்வர்!

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிந்தைய செலவை கர்நாடக அரசே ஏற்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் போது இந்தியாவில் பலர் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதும் பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 4,086 பேர் சிகிச்சை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,086 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பில் 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 828 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றில் அதிகபட்சமாக நாக்பூரில் 1,395 பேருக்கும், புனே … Read more

கருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி!

கருப்பு பூஞ்சை பாதிப்பால் மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் நாடு முழுதும் இதுவரை பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனராம். … Read more

மும்பையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் நீக்கம்!

மும்பையில் 3 குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்கள் பாதிப்படைந்துள்ளதையடுத்து, அவர்களது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு கண்கள் நீக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனால் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில் மும்பையில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் … Read more

கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ள சந்தையில் விற்ற 5 பேர் கைது…!

கொரோனாவை தொடர்ந்து தற்போது பலரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தடுப்பூசி மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றதாக சிலர் கைது … Read more

#BREAKING: கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு..!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.280 கோடி நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பி … Read more

ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!

ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கியது. இதைத் தொடர்ந்து பூஞ்சைத் தொற்றுகள் நாட்டில் தலைத்துாக்கத் தொடங்கியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என ரக ரசமாக பூஞ்சைத் தொற்றுகள் மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. மேலும் பூஞ்சைத் தொற்று அதிகரிக்க அதிகரிக்க இதற்கான தடுப்பூசிகளுக்கு … Read more

#BREAKING: கருப்பு பூஞ்சை -தமிழகத்தில் 847 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பைகள் ஆம்போடெரிசின்-பி மருந்து வந்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பி ஆம்போடெரிசின்-பி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.  தமிழகத்தில் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் … Read more