3 வேளைக்கு 5 மாதத்திற்கு தேவையான உணவு எங்கள் டிராக்டரில் உள்ளது – விவசாயி..!

சமீபத்தில் மக்களவை, மாநிலங்களவையில் வேளாண்சட்டங்களை எதிர்கட்சிகள் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரும் இந்த வேளாண் சட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டமும் டத்தினர். இந்த சட்டங்களை திரும்பப்பெற கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில்  பேரணி நடத்தினர். அப்போது, ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். … Read more

ஹரியானா ஆளுநருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சத்யதேவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் இருந்துதகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு…!

மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையைக் குறைத்துள்ளது. இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையை ரூ.900 மற்றும் ரூ .500 ஆக ஹரியானா அரசு குறைத்துள்ளது. இது, தொடர்பான உத்தரவை ஹரியானாவின் சுகாதாரதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் அரோரா வெளியிட்டார். இதற்கு, முன்னதாக ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் தனியார் ஆய்வகங்களில் விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் விலை ரூ .1,200 மற்றும் ரூ .650 … Read more

பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!

ஹரியானா பல்லாப்கர் பகுதியில் 21 வயது மாணவி ஒருவர் தனது கல்லூரிக்கு வெளியே நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கல்லூரிக்கு வெளியே நடந்து சென்று கொண்டிந்த பெண்களை வழிமறித்து ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது, சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் இளைஞர் ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை … Read more

முன்னாள் முதல்வரை தோற்கடிக்க ஒரு பாஜக உறுப்பினர் போதும் – முதல்வர் கட்டார்

ஹரியானா மாநிலத்தில் வருகின்ற பரோடா சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடிக்க ஒரு சாதாரண பாஜக உறுப்பினரே போதும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் இன்று தெரிவித்தார். அடுத்த மாத நடைபெறவுள்ள, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட ஹூடா துணிந்த சில நாட்களுக்குப் பிறகு கட்டார் இந்த கருத்துக்களை தெரிவித்தார். இதற்கிடையில், வருகின்ற நவம்பர் -3 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பரோடா சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரசும் … Read more

ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

ஹரியானாவின் துணை முதலமைச்சரும், ஜன்னாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் ஒரு வீடியோ வெளிட்டுள்ளார். எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், அவர் தன்னை தனிமைப்படுத்துவதாகவும், கடந்த வாரத்தில் என்னை அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  

ஹரியானவுக்கு டிராக்டர் ஒட்டி சென்ற ராகுல் காந்தி

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்.   அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனேவ காங்கிரஸ் எம்.பி. ராகுல் … Read more

4 ஆண்களால் ஹரியானா குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்!

4 ஆண்களால் ஹரியானாமாநிலத்தில் உள்ள குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ள குர்கான் டிஎல்எப் எனும் கட்டிடத்தின் 2-வது மாடியில் 25 வயதுடைய பெண்ணொருவர் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆண்களுமே 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருப்பதாக உதவி போலீஸ் கமிஷனர் கரண் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணை … Read more

நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் – ரயில்கள் ரத்து.!

நாடு முழுவதும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்களுக்கு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மொத்தம் 31 விவசாயிகள் அமைப்புகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வகையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து, விவசாயிகள் இன்று நெடுஞ்சாலையில் போராட்டம் … Read more

வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு … Read more