சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக சாலையில் விழுந்த பெண்

சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குறித்த பேருந்து பணிமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. இதையடுத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். முழுதாக கீழே … Read more

புனேயில் டிரக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!

புனேயில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் ஒருவர் பலி, 4 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை(செப் 18) இரவு சாஸ்வத் சாலையில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) ஷிவ்ஷாஹி பேருந்து கண்டெய்னர் டிரக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். பஸ் பந்தர்பூரில் இருந்து புனே ஸ்வர்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை : சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து …!

சென்னையில் அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர் மந்தைவெளி மார்க்கமாக சென்ற அரசு மாநகர பேருந்து … Read more

கேரளா: அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ….!

கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட கூடிய ஊதியம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் கேரளாவில் பேருந்துகள் இயங்கவில்லை. எனவே பயணிகள் … Read more

கோயம்பேட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து ….!

கோயம்பேட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, பயணிகள் குறைவாக இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து கோயம்பேட்டில் வைத்து திடீரென தீ பிடித்து இருந்துள்ளது. முன்னதாக சாலையோரம் சென்ற மக்கள் பேருந்தில் இருந்து கரும்புகை வந்ததை ஓட்டுனருக்கு தெரிவித்துள்ளனர். இதனை சுதாரித்து கொண்ட பயணிகள் பேருந்தில் இருந்து உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அதன் பின் பேருந்தில் மளமளவென்று தீ பேருந்தில் பரவியுள்ளது. பயணிகள் குறைவாக இருந்ததால், … Read more

புதிய அரசு பேருந்தை ஒட்டி, தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி-ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் பிட்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அதன்படி ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி உடையார் பாலம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் செல்லும் வகையில் இன்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் … Read more

#BREAKING: அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.!

வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடக்கம். தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் … Read more

நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து இன்று முதல் 900 பேருந்துகள் இயக்கம்.!

நெல்லை போக்குவரத்து கழகத்தின் கீழ் இன்று 900 பேருந்துகள் இயங்க உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற 6 மண்டலங்களில் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகளை மட்டும் 60 சதவீத பயணிகளுடன் (40 … Read more

கார் மீது மோதிய அரசு பேருந்து.! கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்த தனியார் பேருந்து.! கல்வி நிறுவனர் உட்பட 4 பேர் பலி.!

தூத்துக்குடியில் இருந்து கல்வி நிறுவன அதிபர் ஐசக் என்பவர் காரில் அரக்கோணம் சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து அவரது காரில் மீது மோதியது. இதனால் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதில், ஐசக் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர் … Read more

4 டயர்களுடன் இயங்கும் அரசு பேருந்து! பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து நேற்று திருப்பூருக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆறு டயர்களுக்கு பதிலாக நான்கு டயர்களுடன் இயங்கியுள்ளது. இதனையடுத்து, அந்த பேருந்துக்கு பின்னால் காரில் சென்ற ஒருவர் அதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.facebook.com/thangavel.subramaniam.71/videos/915052598840225/ பொதுமக்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள், கவனமற்ற முறையில் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக … Read more